தூத்துக்குடி மாவட்டம், செப்.03, உடன்குடி அருகே தைக்கவூரில் உள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் ஆவணிக்கொடை விழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு சுவாமி பூ கும்பம் எடுத்து ஊர் சுத்தி வருதல் நடந்தது. 2வது நாளான இன்று காலை 8.00 மணி பக்தர்கள் பால்குடம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு பால் குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேக பூஜை நடந்தது. மதியம் 1 மணி அளவில் சுவாமி பூக்கும் எடுத்து வீதி உலா வருதல் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சாம கொடையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். விழாவில் தைக்கவூர் நண்பர்கள் குழுவினர் மற்றும் சைலன்ட் கில்லர்ஸ் சிறப்பிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் சிறப்பாக செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment