திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கருடசேவை.
ஸ்ரீவைகுண்டம் செப் 4.தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 8 வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கொடி ஏற்றம் நடந்து. தினசரி இரவு 7 மணிக்கு வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.
இன்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாட வீதி புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்.ஹோமம் பூர்ணாகுதி திருவாராதனம். சாத்துமுறை நடந்தது பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது. இரவு 7. 30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி. ரதவீதி புறப்பாடு நடந்தது. செப் 8 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு. பாலாஜி. சீனிவாசன். ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை திருவேங்கடாச்சாரி. ஸ்ரீ தரன் ஸ்வாமி சடகோபன் சுவாமி. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். ராஜலட்சுமி செந்தில் குமார். காளிமுத்து. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் லோகநாயகி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஊர்த் தலைவர் கிருஷ்ணன்.உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment