குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 September 2024

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு.


செப்.24, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்,குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா அடுத்த மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் ஆய்வு செய்தார். 


கோவில் வளாகம் மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார்,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் உட்பட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad