செப்.24, பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 89-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ.பி.ரமேஷ், நகர் மன்ற தலைவர் சிவ ஆனந்தி, நகர துணைச் செயலாளர் தோப்பூர் மகாராஜன், உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment