89வது பிறந்த நாள் விழா - சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 September 2024

89வது பிறந்த நாள் விழா - சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை.

செப்.24, பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 89-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர அதிமுக செயலாளர் மகேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ஆர் எம் கே. சுந்தர், சுரேஷ் பாபு, டாக்டர் என் சுரேஷ், பழக்கடை திருப்பதி, காயாமொழி ஒன்றிய மகளிரணி ரம்யா நாராயணன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad