தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.
பா. சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சந்தை அருகே அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பகுதிச் செயலாளர் சுரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், நாராயணன், வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், சதீஷ், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, தொமுச நிர்வாகி மரியதாஸ், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment