தூத்துக்குடி மாவட்டம்: 10.09.2024, நாலாட்டின்புதூர் பகுதியில் சர்ச் கெபியின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய நபர் கைது.
கடந்த 08.09.2024 அன்று நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை சாலையில் உள்ள சகாயமாதா சர்ச் கெபியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சகாய மாதா சர்ச்சின் துணைச் செயலாளரான நாலாட்டின்புதூர் அழகர் நகரை சேர்ந்த ராயப்பன் மகன் தேவதாஸ் (55) என்பவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாலாட்டின்புதூர் ஆர்.சி தெருவை சேர்ந்த கேப்ரியல் மகன் அமல்ராஜ் (57) என்பவர் மேற்படி சர்ச் கெபியின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் அமல்ராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் சாதி மற்றும் மத ரீதியிலான தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment