முதியோர், ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னை தெரசா மனித நேயஇயக்கத்தினர் நலத்திட்ட உதவி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 September 2024

முதியோர், ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னை தெரசா மனித நேயஇயக்கத்தினர் நலத்திட்ட உதவி.

முதியோர், ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னை தெரசா மனித நேய இயக்கத்தினர் நலத்திட்ட உதவி.

செப்.11, குமரி மாவட்டம் தொலைய்யா வட்டத்தில் உள்ள ஜீவன் ஜோதி முதியோர் இல்லத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அன்னை தெரசா மனித நேய இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 


மேலும் திருச்செந்தூரில் செயல்படும் ஆதரவற்றவர்களுக்கான மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான போர்வைகள், அடைக்கலாபுரம் அறநிலையத்து வளமையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பால் பவுடர் மற்றும் வீரபாண்டிபட்டினத்தைச் சார்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
 

முன்னதாக இயக்கத்தின் செயல்பாடுகளை மனுவேல் பி. ராயர்,தொகுத்து வழங்கினார். இதற்காக ஏற்பாடுகளை அன்னை தெரசா மனித நேய இயக்கத்தின் தலைவி மெசினா லிபர்ட்டி பர்னாந்து, துணைத்தலைவி ராணி பீரிஸ், செயலர் பிரசன்னா பிராயி, துணைச்செயலாளர் மார்ட்டின் பர்னாந்து, பொருளாளர் லொவினா பீரிஸ் ஆகியோருடன் இயக்க உறுப்பினர்களும் இணைந்து செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad