பரமன்குறிச்சியில் மாயாண்டி சுவாமி கோவில் கொடைவிழா இன்று பந்தல்கால் நடப்பட்டது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 September 2024

பரமன்குறிச்சியில் மாயாண்டி சுவாமி கோவில் கொடைவிழா இன்று பந்தல்கால் நடப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் அருள்மிகு மாயாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் புரட்டாசி கொடைவிழாவையொட்டி இன்று பந்தல்கால் நடப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டுபந்தல்கால் நாடப்பட்டது.

இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், கோவில் நிர்வாக தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் சின்னத்துரை, செயலாளர் வி.பி. ராமநாதன், பொருளாளர் சங்கரகுமாரஐய்யன், பரமன்குறிச்சி எம்ஜிஎம் ஜுவல்லரி உரிமையாளர் மூர்த்தி, மற்றும் ஊர் பிரமுகர்கள் அரிச்சந்திரன், மணிவண்ணன், சந்திரசேகரன், ஆறுமுக பாண்டியன், சரவணபாண்டியன், போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


வரும் 26 மற்றும் 27 மற்றும் 28ம் தேதிகளில் கொடைவிழா நடைபெறுகிறது. வில்லிசை, கரகாட்டம், இசை நிகழ்ச்சி உள்ளிட்டவைகளும் நடக்கிறது. மேலும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
.திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad