மணப்பாடு புனித யாகப்பர் ஆலய பங்கு புனித மிக்கேல் அதிதூதர்ஆலய 21ம் ஆண்டு திருவிழாஇன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 September 2024

மணப்பாடு புனித யாகப்பர் ஆலய பங்கு புனித மிக்கேல் அதிதூதர்ஆலய 21ம் ஆண்டு திருவிழாஇன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு புனித யாகப்பர் ஆலய பங்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 21ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவில் புனித யாகப்பர் ஆலய பங்கு தந்தை லூர்து வில்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழா கொடியை சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்து ஏற்றிவைதார். கொடியேற்று விழாவில் உதவி பங்கு தந்தை வேம்ஸ் ,ஊர் தலைவர் அந்தோணி முகேஷ்மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் நவநாள் திருப்பலி , நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது. 

வரும் 28ம்தேதி தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு ஆராதனை, 29ம் தேதி காலை 7மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், காலை 10 மணிக்கு விளையாட்டுபோட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.. பின்னர் இரவு 7.00 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. இரவு 7.30மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


விழாவையொட்டி வரும் 1ம் தேதி மதியம் 2 மணிக்கு 21 ம் ஆண்டு அசன பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புனித யாகப்பர் ஆலய பங்கு தந்தை அருட்பணி லூர்து வில்சன் , உதவி பங்கு தந்தை அருட்பணி வேம்ஸ், ஊர் தலைவர் அந்தோணி முகேஷ் மற்றும் விழா குழுவினர், இறைமக்கள் செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad