தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல மாநாடு திருச்செந்தூரில் நடந்தது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 September 2024

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல மாநாடு திருச்செந்தூரில் நடந்தது.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல மாநாடு திருச்செந்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் வடக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மத்திய மாவட்ட தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தெற்கு மாவட்ட தலைவர் டிலைட்டா ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

கூட்டத்தில் மறைந்த வணிகர் சங்க தலைவர் வெள்ளையனுக்கு சென்னையில் மணி மண்டபம் தமிழக அரசின் சார்பில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட கோருவது, வணிகர்களை பாதிக்காதவாறு ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துவது, டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வணிகர்களுக்கு உடனடியாக மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டுவது, மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஏரல் ஆத்தூர் பாலங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோருவது, அரசினால் தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் வைத்து விற்கக் கூடாது எனவும், தென் மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் சேவையை இயக்க வலியுறுத்துவது எனவும், தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன்வர வேண்டும் எனவும், காலக்கெடு முடிவடைந்து வெறுமனே காட்சி பொருளாக உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், அழுகும் நிலையில் உள்ள காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஐந்து ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கி விழாவில் கௌரவிக்கப் பட்டனர்.மேலும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளும் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர அதிமுக செயலாளர் மகேந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, ஆர் எம் கே. சுந்தர், டாக்டர் என் சுரேஷ், காயாமொழி அதிமுக மகளிர் அணி ரம்யா நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக திருச்செந்தூரில் உள்ள அம்பேத்கர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வணிகர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் மாவட்ட ஆலோசகர் வன்னிய பெருமாள் நன்றியுரை கூறினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad