கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமை தாங்கினார் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர்.யாபேஷ், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் இசக்கிமுத்து, குருசாமி முன்னிலை வகித்தனர்,
இக்கூட்டத்தில் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் நகரயாதவர் வியாபாரிகள் சங்கம், வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் விற்பனயாளர் சங்கம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வியாபாரிகள் சங்கம், செல்போன் விற்பனையாளர் சங்கம், காயல் பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்கம், புறநகர் ரத்தினபுரி, ஆத்தூர் வியாபாரிகள் சங்கங்கள் கலந்து கொண்டன.
மாநில செய்தித்தொடர்பாளர் செல்வின் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
(1)திருச்செந்தூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் SETC விரைவு பேருந்துகளுக்கு திருச்செந்தூரில் பணிமனை அமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(2) குலசை தசரா திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாமல் வணிகம் செய்திட முழு இரவு வணிகம் செய்திட காவல்துறை ஒத்துழைப்பு நல்கிட வேண்டி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(3) ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக ஆங்காங்கே சேதமடைந்து இருக்கும் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் கழிப்பிடம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்திடவும் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(4) பக்தர்கள் வசதிக்காக அதிக தொடர் வண்டிகளை இயக்கிட மத்திய ரயில்வே நிர்வாகத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(5) கடந்த வருடம் புகையிலை குட்கா பொருட்கள் விற்று அபராதத்திற்கு ஆளான சிறு வணிகர்களின் கடைகளை தற்போது புகையிலை குட்கா விற்காத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை உணவு பாதுகாப்பு துறையும் காவல்துறை அதிகாரிகளும் கைவிடவேண்டும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கைவிடும்படி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(6) நமது தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் வரும் 2025மே5 வணிகத்தின 42வது மாநாட்டிற்கு முன் 100புதிய சங்கங்களை நமது வணிகர் சங்கத்தில் இணைக்க வேண்டும் என கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(7) திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்திட கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்
No comments:
Post a Comment