தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுமார் பத்தாயிரம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதில் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர் சங்கம், தொழிலாளர் சங்கம், பொது பஞ்சாயத்து சங்கம் என மூன்று சங்கங்கள் உள்ளன.
இந்நிலையில், பொது பஞ்சாயத்து சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக கூட்டம் நடைபெறுவதை ஒட்டி இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment