செப்.27, விளாத்திகுளம் அருகே குடிநீர் கண்மாய் மற்றும் கோவிலை உப்பள நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம மக்கள் யூனியன் சேர்மனிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் ஜமீன் கஸ்பா 30 ஏக்கர் 62 சென்ட் நிலப்பரப்பில் அமைந்திருந்த பெரிய குடிநீர் கண்மாயையும் (அய்யா கண்மாய்), அதன் அருகில் இருந்த அருள்மிகு ஸ்ரீ கண்ணம்மாள் திருக்கோவில் மற்றும் கோவிலை சுற்றி இருந்த குடிசைகள், ஆடு-மாடு தொழுவங்கள் இருந்த கண்ணம்மாள் கோவில் தெருவையும் சகாய மாதா சால்ட் கம்பெனி என்ற தனியார் உப்பள நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும்,
அங்கிருந்த பொதுமக்களை அடித்து துரத்தி விட்டு அப்பகுதியில் அமைந்திருந்த கண்ணம்மாள் கோவில் உட்பட அய்யா கண்மாயையும் அழித்து உப்பளம் அமைத்து தற்போது வரை பயன்படுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு தகவலும் வரவில்லை, ஆகையால் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சீனிவாசன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment