தூத்துக்குடியில் அக்.6ல் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 September 2024

தூத்துக்குடியில் அக்.6ல் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்!

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்.6ஆம் தேதி காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. 

இதில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், சுவாமி, அம்பாளின் பிரமாண்டமான திருவுருவ அலங்கார ஊர்திகளின் ஆரவார அணிவகுப்புடனும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி சூலம் ஏந்திய 108 பெண்களின் பிரம்மாண்ட அணிவகுப்பும் நடைபெற உள்ளது என்று ருத்ர தர்ம சேவா நிறுவனர் தா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad