செப்.21, மூக்குபேரியில் தபால் அலுவலகத்தில் வைத்து அஞ்சல் அலுவலகம் சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் மூக்கு பேரி தூய மார்க்கு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் செல்வின் துரை 1 வதுவார்டு கவுன்சிலர் பொன்ராணி ரீட்டா ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
சாத்தான்குளம் அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளர் சுடலைமுத்து துணை அஞ்சல் அதிகாரி நரசிம்மன் ஆகியோர் அஞ்சலக திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கி கூறினர் இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment