445வது ஆண்டு பெருவிழாவில் தீமையை அனைவரும் வெல்லுங்கள் - ஆயர் ஸ்டீபன் அந்தோணி நற்ச்செய்தி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாட்டியில் உள்ள திருச்சிலுவை திருத்தல 445வது ஆண்டு பெருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 ம் திருவிழாவான நேற்று 7.00 மணிக்கு பெருவிழா ஆராதனை மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
10 ம் திருவிழாவான இன்று காலை 6:00 மணிக்கு மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெற்றது.
இதில் ஆயிரகணக்கான அளவில் திரண்டு இருந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தீமையை அனைவரும் வெல்லுங்கள், சிலுவையே கிறிஸ்தவர்களின் அடையாளம் உள்ளிட்ட சிறப்பு நற்செய்தியை வழங்கினார். நிகழ்ச்சியில் மனப்பாடு மரவட்ட முதன்மை குரு பென்சிகர் அடிகளார்,
ஆலந்தலை இயேசுவின் திரு இருதய கெபி திருத்தலத்தின் திருத்தல அதிபர் சில்வெஸ்டர் மற்றும் அருட்தந்தையர்கள் அருள் சகோதரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை லூர்து வில்சன்,உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் மற்றும் விழாக்கமிட்டினர் சிறப்பாக செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment