காயல்பட்டினத்தில் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்ற 2 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே உள்ள காட்டுமொகுதூம் பள்ளியை சேர்ந்த செய்யது இப்ராகிம் மகன் தமீம் அன்சாரி (21). இவர் மாட்டு இறச்சி கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். மேலும் சொந்தமாக மாடுகள் வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி காலை 8 மணிக்கு வழக்கம் போல் மாடுகளை அருகில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார்.
பின்னர் மாலை 6 மணிக்கு மாடுகளை திரும்ப வீடு பகுதிக்கு ஓட்டி வருவதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது மேய்ச்சலில் இருந்த ஒரு பசுமாட்டை காணவில்லை. அந்த பகுதி முழுவதும் அவர் தேடிப்பார்த்தும் மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோன்று, அன்றையதினம் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த முகைதீன்கருணை மகன் செய்யது சகாப்தீன் என்பவரது பசுமாடும் காணாமல் போயுள்ளது. இதை தொடர்ந்து இரண்டு பேரும் சேர்ந்து ஓடக்கரை பகுதியில் மாடுகளை தேடிச்சென்றனர். அப்போது தைக்காபுரம் சாலையின் சந்திப்பில் 2பேர் பசுமாடுகளுடன் சென்று கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, தங்களது மாடுகள் என தெரிய வந்தது.
தங்களது மாடுகளை திருடி சென்றதை அறிந்த அவர்கள், மாடுகளுடன் அந்த 2பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் காயல்பட்டினம் மேலநெசவுத் தெருவை சேர்ந்த காஜாமுகைதீன் மகன் ஜெய்னுல் ஆப்தின், ஓடக்கரையை சேர்ந்த கணேசன் மகன் இளவரசன் என்பதும் தெரியவந்தது. இதில் ஜெய்னுல் ஆப்தின் கஞ்சா வியாபாரி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அந்த 2 பேரையும் பிடித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சேக்அப்துல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ஆப்தீன், இளவரசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும்அவர்களிடமிருந்து 45 ஆயிரம் மதிப்புள்ள 2 பசுமாடுகளை மீட்டனர்.
இதில் ஜெய்னுல்ஆப்தீன் மீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை செய்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment