காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கு (Receptionist and Data Entry Assistant) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 31 August 2024

காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கு (Receptionist and Data Entry Assistant) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்:31.08.2024, தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கு (Receptionist and Data Entry Assistant) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் அறிவுரை கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (31.08.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவும், புகார் மனுக்களை கணிணியில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad