தூத்துக்குடி மாவட்டம் :31.08.2024, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி காவல் துறை சார்பில் நிறுவப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதான நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றங்களை கண்டறியவும், கண்காணிக்கவும், விபத்து நடைபெறுவதை தடுக்கவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில்,
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதிகளில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மிகக் குறுகிய காலத்தில் சரிசெய்யப்பட்டு, ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்திடும் வகையில் சரி செய்யப்பட்டது.
மேற்படி சிசிடிவி கண்காணிப்பு திரை பொதுமக்களின் நலனுக்காக இன்று (31.08.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.

No comments:
Post a Comment