தூத்துக்குடி மாவட்டம் :31.08.2024, தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 9514194100 என்ற எண்ணிற்கு தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment