நாசரேத்: சாலமோன் பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 August 2024

நாசரேத்: சாலமோன் பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி


நாசரேத், ஆகஸ்ட்.12, சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன் தேசிய கொடி ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தலைமை காவலர் சந்தனமாரி போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க, அதனை தொடர்ந்து மாணாக்கர்களும, ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்தனர்.  


பள்ளி தலைவர் எலிசபெத்பால் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 


மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு பற்றி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  


முடிவில் உதவி முதல்வர் மாரித்தங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.


#தூத்துக்குடி மாவட்டம்

 #ஏரல் தாலுகா


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 

Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad