ஆகஸ்ட் 29, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் உறியடி திருவிழா நடந்தது. வைஷ்ணவ கோவில்களில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நேற்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம். பின்னர் அலங்காரம் செய்து 10.30 மணிக்கு தீபாராதனை சாத்துமுறை தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு கிருஷ்ணர் பல்லக்கிலும் மற்றும் சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் தோளுக்கனியானிலும் புறப்பட்டு கோவில் வாசலுக்கு வந்தனர். சுமார் 8.30 மணிக்கு சிறுவர்கள் வழக்கு மரத்தில் ஏறி ஏறி வழங்கினர். கடைசியாக ஒரு சிறுவன் மேல் ஏறி அங்குள்ள பலகாரம் பணம் ஆகியவற்றை மரியாதை நிமித்தமாக எடுத்துக் கொண்டார், பின்னர் சுவாமி வீதி உலா சென்றார்.
இந்நிகழ்வில் அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு நாராயணன் ராமானுஜன் சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா, மாரியம்மாள் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் முருகன், முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment