நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் கால்பந்து போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 31 August 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் கால்பந்து போட்டி.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஆகஸ்ட் 31, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார அளவிலான மாணவியர் கால்பந்து போட்டி நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை பட்டு டால்மி முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். 

திருச்செந்தூர் வட்டாரத்தை சார்ந்த ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மூக்குபேரி, சாகுபுரம்  பள்ளிகளைச் சார்ந்த 14, 17, 19 வயது பிரிவு மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 14 வயதுக்கான பிரிவில், காயல்பட்டினம் எல்.கே மெட்ரிக் பள்ளி மாணவியர் முதலிடத்தையும், 17 வயதுக்கான பிரிவில் மூக்குப்பேரி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடத்தையும், 19 வயதுக்கான பிரிவில் ஆறுமுகநேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த உடற் கல்வி ஆசிரியர்களான பிரைட்டன் ஜோயல், சாத்ராக், ஜாஸ்மின், இஸ்மாயில், ஜமால், ப்ரூமல் மற்றும் ருக்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் தலைமையில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad