ஆழந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி பெருவிழா திருப்பலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 August 2024

ஆழந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி பெருவிழா திருப்பலி.


ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி பெருவிழா திருப்பலி ஏழைகளுக்கு உதவி செய்தால் இறைவனை காணலாம் ஆயர் ஸ்டீபன் அந்தோணி நற்செய்தி.


திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தின் 96 வது ஆண்டு பெருவிழா திருப்பலி இன்று நடைபெற்றது. 


இதில் தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு நற்செய்தி வழங்கினார். அவர் பேசுகையில், வரலாற்று மாற்று பாதையை உண்டாக்கியவர்தான் நம் இயேசு. ஏழை எளியோருக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இறைவனை காண முடியும். ஒருவருக்கொருவர் உண்மையான அன்பை நாம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நற்செய்தியை வழங்கினார். 


தொடர்ந்து இந்த விழாவில் 36 குழந்தைகளுக்கு பொது நன்மை வழங்கப்பட்டது. மேலும்10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தங்க நாணயம், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மணப்பாடு மறைவட்ட முதன்மைக் குரு பென்சிகர், வீரபாண்டியபட்டினம் பங்கு தந்தை அலாசியுஸ் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதிக்குழுவினர் செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக

MT.அந்தோணி ராஜா - திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad