திருச்செந்தூர் ஆவணி 7 ஆம் திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 August 2024

திருச்செந்தூர் ஆவணி 7 ஆம் திருவிழா.


திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் 7-வது நாளான இன்று வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் சண்முகர் வீதியுலா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 7வது திருநாளில் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.


 இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடந்தது. இதனையடுத்து சுவாமி சண்முகர் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். 


 பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் காட்சியளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


இதனையடுத்து சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டபம் சென்றடைந்தார். அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்.2-ம் தேதி நடக்கிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக

MT.அந்தோணி ராஜா

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad