தென்மண்டலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 14 August 2024

தென்மண்டலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.


நெல்லை, ஆகஸ்ட்.12, காவல்துறை தென்மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும், 


திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகரங்களிலும் போதைப் பொருட்கள் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5191 கிலோ 413 கிராம் போதைப் பொருட்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 

அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணைகளைப் பிறப்பித்திருந்தன.


போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று (12.08.2024) மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மாணவ, மாணவிகளால் ஏற்கப்பட்டது.  


இத்தினத்தை முன்னிட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, ஆணைப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் முனைவர் பா. மூர்த்தி தலைமையில் காவல்துறை தென்மண்டல போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல்துணை ஆணையர் ஆதர்ஷ்பச்சேரா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாங்கரே பிரவின் உமேஷ், மதுரை தடயவியல் நிபுணர் விஜயதரணி ஆகியோர் முன்னிலையில், 


திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே, பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.


இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் நாங்குநேரி உதவி காவல் கண்காளிப்பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


#திருநெல்வேலி மாவட்டம்


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 



Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad