தூத்துக்குடி மக்களின் கனவு நனவானது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 14 August 2024

தூத்துக்குடி மக்களின் கனவு நனவானது.


தூத்துக்குடி, ஆகஸ்ட்.14, தூத்துக்குடி ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வரும் மிக முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலான பாலருவி எக்ஸ்பிரஸ் வண்டி எண். 16791, 16792 தூத்துக்குடி வரை நீடித்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து இந்த ரயிலை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி துவக்கி வைக்க உள்ளார்.


இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஒரு புதிய ரயில் சேவையும் கிடைத்துள்ளது. இந்த ரயில் நிலையிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு வரை இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 மேலும், இந்த ரயில் தூத்துக்குடி வரை நீடித்து இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் பாலக்காடு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண். 16781, 16792 பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைந்து அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 06.40 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. ஆக.16ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது.


நாளை முதல் இந்த ரயில் சேவை துவங்க உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 

Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்

No comments:

Post a Comment

Post Top Ad