விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.20,  விளாத்திகுளம் அருகிலுள்ள பிள்ளையார் நத்தம் கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சோலைராஜ்(31) இவர் அங்குள்ள கரிமூட்டத்தில் வேலை பார்த்து வந்தார். 

நேற்று வழக்கம் போல் காலையில் சோலைராஜ் வேலைக்கு சென்றார். மதியம் 2 மணிக்கு மேல் அவர் மட்டும் கரிமூட்டத்தில் பணியில் இருந்தார் இதையொட்டி பயங்கரமாக இடிமின்னல் வெட்டியது.

அப்போது எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்னல் தாக்கியது, இதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad