ஏரலில் ஆவணி அவிட்டம் - பூணூல் அணியும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

ஏரலில் ஆவணி அவிட்டம் - பூணூல் அணியும் விழா.

ஏரல், ஆகஸ்ட்.20, ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. 

இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.

அதன்படி நேற்று, ஆகஸ்ட்.20, வியாழன் காலை தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மேலத்தெரு விஸ்வகுல வடபத்திரகாளியம்மன் கோவிலில் பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

ஏரல் அரசு கண் பரிசோதகர் யோகாசிற்பி ஆசைத்தம்பி ஆச்சாரி, ஏரல் ராஜன், பாலமுருகன், சுடலை, முத்துமாலை ஆச்சாரி மற்றும், சிறுத்தொண்டநல்லூர், கருவேலம் ஆச்சாரி மற்றும் நடுவைக்குறிச்சி நண்பர்கள் எனப்பலரும் (சுமார் இருபது நபர்கள்) கலந்து கொண்டனர்.

இக்கோயில் வளாகத்தில் தனிச்சன்னதியில் தொழிற்கடவுள் விஸ்வகர்மா சிலை வழிபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலய அர்ச்சகர் குமார் ஆச்சாரி மற்றும் அவர் மைந்தர் இளைய அர்ச்சகர் ஜெகன் ஆகியோர் உபகர்மா நிகழ்வை சிறப்பாக செய்தனர் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதத்தில் இருந்து பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜை தொடர்ந்து நடைபெற ஆரம்பித்தது கூடுதல் சிறப்பாகும், நம் முன்னோர்கள்
பல இக்கட்டான ஆதிக்க அதிகார சூழலிலிருந்து இந்த பூணூல் அணியும் உரிமையை தொன்றுதொட்டு காத்துத்தந்த பாரம்பரியத்தை, தொடர வேண்டும் என்று ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களின் பண்பாடு மிகவும் பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad