கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பயோ டீசலை போலீசார் பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பயோ டீசலை போலீசார் பறிமுதல்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.20, கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுவதாகவும்  கூறப்படுகிறது. இது தொடர்பா எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல்துறையினர் 3வது மைல் அருகே வாகன சோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். தென்காசி மாவட்டத்திலிருந்து வந்த இந்த லாரியில் உரிய  ஆவணம் இன்றி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் 48 பேரல்களில் கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து லாரியுடன் அதிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad