தூத்துக்குடி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத் தடை - வாலிபர் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

தூத்துக்குடி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத் தடை - வாலிபர் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம்.

தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் விவின் (35). இவர் வி.இ.ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளையங்கோட்டை ரோட்டில் ஆசிரியர் காலனி சந்திப்பு அருகே வந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இதில், பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், தூத்துக்குடியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால் வாலிபர் உயிரிழந்தவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad