ஆகஸ்ட்.30, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மறவன் மடம் பகுதியில் சென்ற ஆண்டு 2023 டிசம்பர் மாதம் பெய்த கன மழையினால் அங்கிருந்த பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் சேதமடைந்த பாலத்தின் அருகே தற்காலிகமாக போக்குவரத்துக்கு மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பாலம் சேதமடைந்திருப்பது தெரியாமல் இருந்ததால் வாகனங்கள் விபத்துக்குள்ளானது.
எனவே இது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது, ஆகையால் பழுதான பாலம் கடந்த 8 மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இன்று ஆக.30, மாலை சேதமடைந்த பாலத்தில் தற்காலிகமாக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தும், திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றன.
No comments:
Post a Comment