நாசரேத் அருகே உள்ள மாதாவனம், புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றி நிகழ்வு இன்று ஆக.30, மாலை நடைபெற்றது.
பிரகாசபுரம் பங்குத்தந்தை அருட்திரு சலேத் ஜெரால்டு அடிகளார் ஆலய திருக்கொடி ஏற்றினார்கள். அதன் பின் அகுஸ்தினார் சபை அருட்தந்தை சந்தியாகு அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
அகுஸ்தினார் சபை அருட்தந்தை சந்தியாகு அடிகளார் ஆற்றிய மறையுரையில், இன்று ஆக.30 முதல் பத்து நாட்களும் ஆசீர்வாதத்தின் நாட்கள். கொடி மரம் ஆனது இறை சக்தியை பெற்று தரும், அதிதூதரால் அருள் மிக பெற்றவள் என வாழ்த்த பெற்றவள், அன்னை மரியா ஆலயம் என்பது மோட்சம் இங்கு ஜெபிக்கப்படும் ஜெபங்கள் நிச்சயமாக கேட்கப்படும் என மறையுரை ஆற்றினார்.
திருப்பலியில் மகனோடு தந்தையும் இருக்கிறார்கள். வேளாங்கண்ணியில் அன்னை செய்த பல்வேறு புதுமைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதுமைகளையும் சிறப்பாக தெரிவித்தார்கள்.
இந்த வைபவத்தில் பிரகாசபுரம், தோப்பூர்,மாதாவனம், கந்தசாமிபுரம் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை அருட்திரு. சலேட் ஜெரால்டு அடிகளார் ஆலய நிர்வாக கமிட்டியினர் மற்றும் மாதாவனம் இறைமக்கள் செய்து இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக - அந்தோணி ராஜா.
No comments:
Post a Comment