விளாத்திகுளத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 August 2024

விளாத்திகுளத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

விளாத்திகுளம், ஆகஸ்ட்.26, விளாத்திகுளத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பங்களாதெருவைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் முருகன்(22) இவரது மனைவி சங்கரி(21) இந்த தம்பதியார் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மன வேதனை அடைந்த முருகன் தனது வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதில் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad