தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு ஏற்பாடு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு ஏற்பாடு.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.26, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி இயக்ககம் மற்றும் முதல்வர் டாக்டர் சிவக்குமார் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை நோய்க்கான ஒரு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ளதால் அங்கே அனேக கப்பல்களும் அதில் பணி செய்யும் ஊழியர்களும் வேற்று நாட்டில் இருந்து வரும் வாய்ப்புகள் உள்ளதால் அவர்கள் மூலமாக குரங்கு அம்மை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்னேற்பாடாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதில் 5 படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்து விதமான மருந்துகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் Apron போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ வசதிகளும்  அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நோயாளிகள் வரும் பட்சத்தில் அவரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்வாப் (Swab) மாதிரிகள் எடுத்து கிண்டி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும். 

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ கல்லூரி இயக்ககம் மற்றும் முதல்வர் சிவக்குமார் அறிவுறுத்தலின் படி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நுண் உயிரியல் தலைவர் ஜெயமுருகன், மருத்துவத்துறை பேராசிரியர் ராஜவேல் மற்றும் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad