உடன்குடியில் அதிமுக கட்சியினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 August 2024

உடன்குடியில் அதிமுக கட்சியினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா.

ஆகஸ்ட்.28, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியான உடன்குடி ஒன்றியம் மற்றும் நகர அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் தாமோதரன் நகர கழகச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்பி. சண்முகநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர்களுக்காண அடையாள அட்டையை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அமிர்தா எஸ் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முருங்கை டி. மகாராஜன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கல்லாமொழி ராஜதுரை, ஒன்றிய இளைஞரணி பொருளாளர் ராம்குமார், செட்டியாபத்து பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார், வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் குலசை சங்கரலிங்கம் ஆண்டிவிளை முத்துக்குமார், கிருஷ்ணகுமார், சிவநேசன், பொன்ஸ்ரீராம், இன்பகரன் சித்திரைலிங்கம், உரக்கடை குணசேகரன், திலீபன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad