ஆத்தூரில் தீடீர் உப்பு மழை - போட்டி போட்டு அள்ளி சென்ற பொதுமக்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 28 August 2024

ஆத்தூரில் தீடீர் உப்பு மழை - போட்டி போட்டு அள்ளி சென்ற பொதுமக்கள்.

 
ஆகஸ்ட் 28, தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் இன்று ஆகஸ்ட்.28 மாலை பி.எஸ்.என் தியேட்டரில் இருந்து வெற்றிலை வியாபாரிகள் சங்கம் வரை உள்ள சாலையில், அளவுக்கு அதிகமாக உப்பு ஏற்றி வந்த லாரியிலிருந்து, உப்புகள் கீழே சிதறி பரவி விழுந்தது. 

இதனை கண்ட பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு சாலையில் பரவி கிடந்த உப்பை அள்ளி சென்றனர். இது போன்ற வாகனங்களால் பின்னால் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற செயல்களை தவிர்க்க தமிழக காவல் துறையினர், உப்பு, மணல் போன்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தார் பாய் கொண்டு மூடாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் தாலுகா செய்தியாளர் சேதுபதி ராஜா. - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad