ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர் விரோத சட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர் விரோத சட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர் விரோத சட்டங்களைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பாக 14:08:2024 புதன்கிழமை மாலை நாசரேத் பேருந்து நிலையம் அருகில் வைத்து பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிச்சந்திரன், மறுமலர்ச்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த ரஞ்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 


மாவட்ட விவசாய சங்கத்தலைவர் ராமையா, கட்டுமான சங்கத்தலைவர் டேவிட், சின்னத்துரை, பாலன் மந்திரமூர்த்தி, ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தொண்டரணி கணேசன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐஎன்டியுசி சார்பில் இம்மானுவேல், பிரேம், தொமுச சார்பில் ரவி., பரந்தாமன் ஆகியோரும் விவசாயிகள். தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad