சிவகளை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

சிவகளை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.15, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சிவகளை ஊராட்சியில் 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (15.08.2024) நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, முன்னிலை வகித்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் இந்த துறைகள் மூலம் பொருளாதாரரீதியாக வளர்ச்சிகளை முன்னேற்ற முடியும். சாலை வசதி, குடிநீர் வசதி, அனைவருக்கும் குடியிருக்கக்கூடிய நல்ல வீடு, போக்குவரத்து வசதி, வேளாண்மை சமந்தப்பட்;ட பொருட்களை சந்தை படுத்துவதற்கு அடிப்படை வசதிகள் மிகவும் அவசியம். ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் மூலமாக சிவகளை ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். குடிநீர் கிடைப்பதற்கு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய 3 குக்கிராமங்களில் இணைப்பு சாலைகள் இருக்கிறதா, இல்லையென்றால் அதற்கான திட்டத்தை இந்த கூட்டத்தின் மூலம் உருவாக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு இணைப்பு சாலை வேண்டும் என்றால் மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாகக் கூட உருவாக்க முடியும். அது மாதிரி குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சுகாதாரம் ஆகியவற்றை இக்கூட்டம் வாயிலாக நிறைவேற்ற முடியும். 

கல்வி பயில நமது தமிழ்நாடு அரசு அதிகமான சலுகைகளை கொடுக்கிறது. குழந்தைகள் படித்தால் தான் அடுத்த நிலையை அடைய முடியும். உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் ஒரு நிலையை அடைந்திருந்தால் உங்களுடைய குழந்தைகளை அதற்கு மேல் ஒரு நிலையை அடைய செய்ய வேண்டும் என்றால் அது கல்வியின் மூலமாக தான் அடைய முடியும். 
ஆகவே, நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளை கட்டயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 

அனைத்து குழந்தைகளும் கல்வியை கட்டாயம் அடைய வேண்டும்.பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு முதல் பள்ளியில் படிப்பதற்கு கட்டிடம், கழிப்பறை வசதி, பள்ளியில் கொடுக்கக்கூடிய 16 வகையான இலவச உபகரணங்கள் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது அதை உங்கள் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
அதே போல், சிறு குழந்தைகளின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு கர்ப்பிணிதாய்மார்களுக்கு முதல் ஆயிரம் நாட்கள் வளர்வதற்கு அங்கன்வாடி மையம் மூலமாக இலவச சலுகைகள் கொடுக்கிறது. 

குழந்தைகளுக்கு போதுமான வளர்ச்சி உள்ளதா, ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் செயல்படுகிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்து போஷாக்கான குழந்தைகளாக மாற்றம் செய்ய வேண்டும்.
நமது அரசு கொடுக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் பயன்படுத்துவது பொதுமக்களாக உங்கள் கையில் தான் உள்ளது. 

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் வரும் செவிலியர்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொற்றா நோய்களை இத்திட்டத்தின் வாயிலாக எளிதாக கண்டறிய முடிகிறது. உங்கள் ஊராட்சிகளில் இருக்கக்கூடிய நீர் நிலைத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அதில் குளோரின் சேர்க்க வேண்டும். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதிபடுத்த வேண்டும். உங்கள் ஊரில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை எப்போது சுத்தம் செய்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். 
சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றால் இந்த பகுதியில் குப்பைகள் இருக்கக்கூடாது. 

நீங்கள் அனைவரும் கிராம ஊராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குப்பைகளை ஆற்று ஓரமாக கொட்டக் கூடாது.
தமிழ்நாட்டில் மொத்தம் பன்னிரெண்டாயிரம் ஊராட்சிகள் உள்ளது. 5 ஊராட்சிகளில் மட்டும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஐந்து ஊராட்சிகளில் உங்களுடைய சிவகளை ஊராட்சியும் ஒன்று. உங்கள் பகுதியில் யார்யெல்லாம் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தான் தெரியும். யார் அதிகம் ஏழ்மையில் இருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலை நீங்கள் தான் தயார் செய்து கொடுக்க வேண்டும். உங்களுடைய பங்கு தாயுமானவர் திட்டத்தில் மிக அவசியம். தமிழ்நாடு அரசு நிறையத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. அது சரியான நபர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்.


தமிழ்நாடு அரசின் ஒரு முக்கியமான திட்டங்களில் ஒன்று மக்களுடன் முதல்வர் திட்டம். இதன்மூலம் அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கக்கூடிய களப்பணியாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை உங்கள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சொல்லுங்கள். 

இந்த மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் அதற்கான தீர்மானங்கள் போட்டு எங்களுக்கு அனுப்பும்போது எல்லா வகையான வசதிகளையும், அரசு கொடுக்கக்கூடிய திட்டங்களை உங்களுக்கு கொடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, பேசினார்கள்.


அதனைத்தொடர்ந்து சிவகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும், 15 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களையும், வேளாண்மை துறை சார்பாக முதலமைச்சர் அவர்களின் மானாவாரி திட்டத்தின்கீழ் இடு பொருள்களை 2 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி வழங்கினார். 
இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், சிவகளை ஊராட்சி மன்றத் தலைவர் பிரதிபா உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad