கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 August 2024

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக  மாதா பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா, ஆக.6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐந்தாம் திருநாளான ஆக.10-ஆம் தேதி மரியன்னை மாநாடு, ஆக.11-ஆம் தேதி புதுநன்மை விழா, ஆக. 14-ஆம் தேதி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

பத்தாம் திருநாளான நேற்று அதிகாலை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் எஸ். அந்தோணிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதா,  பரலோக  மாதா தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர். ரதங்களைத் தொடர்ந்து இறைமக்கள் கும்பிடு சேவை செய்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பின்னர் அருள்தந்தையர்களின் திருவிழா திருப்பலி, இரவு பாளையங்கோட்டை புனித சவேரியார் கலைமனைகள் சேசு சபை அருள்தந்தையர்கள் திருப்பலி, நற்கருணை பவனி ஆகியன நடைபெற்றன. விழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை அந்தோணி அ.குருஸ் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஜே.அந்தோணிராஜ், ஆன்மிகத் தந்தை வி.எஸ். அந்தோணி ராஜ், களப்பணியாளர் ஜேக்கப் பவுல், மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், புனித தெரசாவின் கார்மேல் சபை அருள்சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்திருந்தனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad