அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர்களை ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்துச் சென்ற கனிமொழி கருணாநிதி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர்களை ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்துச் சென்ற கனிமொழி கருணாநிதி.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (24.08.2024) கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர்களை ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:- இதற்கு முன் நான் வந்த போது புத்தகங்கள் வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்டீற்கள் நானும் கொஞ்சம் புத்தகம் வாங்கி வந்துள்ளேன், அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உங்களுக்கென புத்தகங்கள் வாங்கி தந்துள்ளார்கள் அவர்களுக்கு உங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எட்வின் குடும்பத்தினரும் இந்த மாதிரி பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு புத்தகம் வாங்கித் தந்துள்ளார்கள். இந்த புத்தகங்கள் அனைத்தையும் நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழாய்வை பார்க்க வேண்டுமென வல்லநாடு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். 


அதன்படி, இன்றைக்கு அவர்கள் அனைவரையும் ஆதிச்சநல்லூர்க்கு அழைத்து வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதே போல் கீழடிக்கும் அழைத்து செல்ல 
வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள் கண்டிப்பாக அங்கும் அழைத்து செல்வதற்கான முயற்சிகளை செய்வேன்.
  
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து இங்கே இருக்கக்கூடிய தொல்லியல்த் துறை அலுவலர்கள் மிகச் சிறப்பாக விளக்கி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்சியோடும் இந்த அகழாய்வை பார்த்து பல விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கனேசமூர்த்தி, திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திர பாபு, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad