ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் அவர்களால் கடந்த சட்டபேரவை கூட்டத் தொடரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார்.

இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் வழங்கினார்..

இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி நேவிஸ் துரைராஜ், பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பரமசிவன் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லதா, மாடசாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்: சி.நாகராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad