நாசரேத், ஆகஸ்ட்.24. தற்போது ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் தொடர்ந்து அதே பழைய ரீசார்ஜ் விலையில் சேவை செய்து வருகிறது.
இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணை பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிர்க்கு மாற்றி வருகின்றனர். இதனால் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிர்க்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நாசரேத் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (MNP) செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் ரூ.50 வசூலித்து வருகின்றனர். ஏற்கனவே ரூபாய் 150 வசூலித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போது அந்த தொகையை திருப்பி அளித்து வந்தனர். ஆனால் தற்போது ரூபாய் 50 வசூலித்து வருகிறது.
ஆனால் இந்த சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது பலரும் அறிந்ததே, ஆயினும் நாசரேத் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலேயே 50 ரூபாய் வசூல் செய்வதை கண்டித்து, நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஒழுங்கு படுத்த வேண்டும் என கூறினார்.
No comments:
Post a Comment