ஓட்டப்பிடாரம் வஉசி அரசு பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 August 2024

ஓட்டப்பிடாரம் வஉசி அரசு பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாணவர்களுக்கான டெலஸ்கோப் பயிற்சி முகாம் நடைபெற்றது.


 தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் அஸ்ட்ரோ கிளப் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்பரை செய்து வருகிறது ஓட்டப்பிடாரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியர் பரமசிவன் அனைவரையும் வரவேற்றார் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிடுவது குறித்தும் வானியல் குறித்தும் பயிற்சி அளித்தார் இதில் ஆசிரியர்கள் சங்கரநாராயணன், முருகன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்ட ஓட்டப்பிடாரம் தாலுகா 
செய்தியாளர் :சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad