பரமன்குறிச்சி கஸ்பா அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆவணி கொடை விழா - மாதவி வில்லுப்பாட்டு நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

பரமன்குறிச்சி கஸ்பா அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆவணி கொடை விழா - மாதவி வில்லுப்பாட்டு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.20, திருச்செந்தூர் வட்டம் பரமன் குறிச்சி கஸ்பா  அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில்  ஆவணி கொடை விழா  சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
விழாவையொட்டி  நேற்று மாலை அம்பாளுக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.00 மணிக்கு  மாதவி வில்லுப்பாட்டு சிறப்பாக நடைபெற்று. இதனைத் தொடர்ந்து  நள்ளிரவு 12.00  மணிக்கு அம்பாளுக்கு  விசேஷ அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். 

மேலும் இன்று காலை திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து  தீர்த்தம் எடுத்து வந்து  சிறப்பு பூஜையில்  நடைபெறுகிறது. காலை 10. 00  மணிக்கு பரமன்குறிச்சி பஜாரில் உள்ள   விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து  மதியம் 12. 00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு பக்தருக்கு பிரசாதம் வழங்கி அம்பாளுக்கு  பொங்கலிட்டு வழிபடுகின்றனர். 

விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு  சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad