பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 August 2024

பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், இன்று (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதி குறித்து நேற்று (17.08.2024) திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசனம், பொதுதரிசனம் என வழிகாட்டி போர்டுகள் வைக்கவும், குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், கடற்கரை பகுதியில் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடலில் கயிறு கட்டியும், கடற்கரையில் ரோந்து வாகனத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களில் போக்குவரத்து பிரிவு காவல்துறை ஆங்காங்கே வழித்தடம் மாற்றம், வழித்தட பாதை உட்பட அனைத்து விவரங்களையும் அறிவிப்பு பலகைகள் மூலம் வைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் கோவிலின் அருகே கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் உள்ள குழிகளை மூடி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கோவில் வளாகப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவை சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தும் மேலும் அங்கு பணியில் இருக்கும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad