ஏரலில் சுதந்திர தின கொடியேற்று விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

ஏரலில் சுதந்திர தின கொடியேற்று விழா

15.08.2024 வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் 78 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக மூவர்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது.



பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆச்சாரி அவர்கள் தலைமை வகித்தார், பிஜேபி பிரமுகர் முத்துமாலை நகைமதிப்பீட்டாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாய்ப்பாட்டுக் கலைஞர் கந்தன் ஆச்சாரி தேசிய பாடல்கள் பாடினார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஏரல் அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் யோகாசிற்பி ஆசைத்தம்பி இறை வணக்கம் பாடி தேசியக்கொடி ஏற்றி , சிறப்புரையாற்றினார்.


விழாவில் விஸ்வகுல தியாகிகள் விருதுநகர் முத்துசாமி ஆச்சாரி, மதுரை மாயாண்டி பாரதி, வல்லநாடு சுடலைமுத்து ஆச்சாரி ஆகியோர்கள் வீர தீரங்களைப் பற்றி பேசப்பட்டது.


நிகழ்ச்சியில் நகைமதிப்பீட்டாளர் அருணன், பொற்கலைஞர் வெங்கடேஷன், ஏரல் உதவும் கரங்கள் கணேசன், பொற்கலைஞர் கலர் மணிகண்டன், பசிபோக்கும் தளத்தின் ஏரல் பொறுப்பாளர்ஐயப்பன், பொன் நகை லேசர் மாரியப்பன், பொற்கலைஞர் செல்வம் மற்றும் மாணவர்கள் முத்துராம், சந்தனஹரிஸ், இசக்கி சந்தியா, முத்து மணிகண்டன், கனிஷ்கா என பலரும் கலந்து கொண்டனர்.


அனைவரையும் ஒருங்கிணைத்த யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார். விழா ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் நன்றி கூறினார். 


ஏழாம் ஆண்டாகத் தொடரும் இந்நிகழ்வு இன்றைய காலை வேலையிலும் தேசிய உணர்வோடு பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 

Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad