பிள்ளையன்மனை கல்லூரியில் சுதந்திர தின விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

பிள்ளையன்மனை கல்லூரியில் சுதந்திர தின விழா.

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன் மனை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சி.எஸ்.ஐ - தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகளின் மேலாளரும் கல்லூரியின் செயலருமான பிரேம்குமார் ராஜாசிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி கல்லூரி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சுதாகர், பிள்ளையன்மனை  கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜிவி எஸ்தர், ஆகியோர் சுதந்திர தின உரை ஆற்றி வாழ்த்துரை வழங்கினர். 

கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டம் உட்பட, மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை என்.சி.சி அலுவலர் மோசஸ் ஞானக்கண், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராகலன்ட் ராஜா சிங் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad