நாசரேத்: மர்காஸ்சியஸ் மேனிலைபள்ளியில் சுதந்திர தினம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

நாசரேத்: மர்காஸ்சியஸ் மேனிலைபள்ளியில் சுதந்திர தினம்.

நாசரேத், ஆகஸ்ட்.15, மர்காசியஸ் மேனிலைப்பள்ளியில் இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஆரம்பமாக முதுநிலை ஆசிரியை ஜெபகனி ஜெபம் செய்து வைத்தார். பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாட, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் வரவேற்று பேசினார்.



பள்ளியின் தாளாளர் சுதாகர்,  இந்தியாவின் 78 வது சுதந்திர தின கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினாக வருகை தந்த பள்ளியின் முன்னாள் மாணவர் முன்னாள் ஜேசுராஜ் பிரான்சிஸ் ஆபிரகாம் சுதந்திர தின சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்

No comments:

Post a Comment

Post Top Ad